எங்களிடம் வேலை செய்யும் 400 குடும்பத்திற்காக உழைக்கிறேன் 30. 8. 2023 அன்று புதுக்கோட்டை, கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனமும் ஜெ.ஜெ.கல்லூரியும் இணைந்து தேசிய சிறு தொழில் தினம் கொண்டாடப்பட்டது. முதலாம் ஆண்டு வணிகவியல் மற்றும் மேலாண்மையியல்மாணவர்களிடம் புதுக்கோட்டையில் சிறப்பு பெற்ற கருப்பையா தொழில் குழுமத்தின் தொழில் முனைவோர் திரு. மு.க.செல்லப்பன் அவர்கள், நேர்மையுடனும் கனவுடனும் உழைக்க வேண்டும். நுகர்வோர்களுக்கு உண்மையாக உழைக்கும் போது எத்தனை தோல்வி நிலை வந்தாலும் நம்மால் முன்னேற முடியும். அப்படி இரண்டு தலைமுறையாக உழைத்ததால்தான் வெறும் 500ரூபாயில் ஆரம்பித்த தொழில் நன்றாக விரிந்துள்ளது. இன்னும் ஐந்தாண்டுகளில் மேலும் வளரும் அந்த நம்பிக்கையும் அதற்கான சவால் எடுக்கவும் தன்னம்பிக்கையுடன் உழைக்க முடியும் அதே போல எங்களிடம் வேலை செய்யும் 400 குடும்பத்திற்காக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். அதே போல இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும் தவற விடக்கூடாது. நல்ல ஸ்மார்ட்டாக தொழில் செய்யும் வல்லமையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். பல மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். தற்சமயம் தேவையான தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். அந்நிகழ்விற்கு கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தின் தாளாளர், முனைவர் கவிதா சுப்ரமணியன் முன்னிலையில், இயக்குனர் முனைவர் அனிதா ராணி தலைமையுரையாற்றினார், புதுக்கோட்டையின் சிறந்த தொழில் முனைவோராக திரு. செல்லப்பன் அவர்களை, வணிகவியல் துறைத்தலைவர் அடைக்கலவன் கௌரவித்தார், ஜெ.ஜெ கல்லூரி மேலாண்மைத்துறைத்தலைவர் வரவேற்றார், பேராசிரியர் சாமிநாதன் நன்றியுரையும், பேராசிரியர் ஜெனிபர் மேரி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். கட்டுமானத்தொழில் சிறந்து விளங்கும் ரோட்டரி மேனாள் தலைவர் துரைமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.