25. 8. 2023 அன்று கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி நடத்தப்பட்டது. திருவாளர் சதீஸ் ஆரோன் ஜோசப், துறைத்தலைவர், கணினி பயன்பாட்டியல் துறை, ஜெ.ஜெ.கல்லூரி புதுக்கோட்டை, அவர்கள் மாணவர்களுக்கு திட்டமிட்ட வாழ்க்கை, சிக்கலைத் தவிர்த்த வாழ்க்கையை வாழ தன்னம்பிக்கையுடனும், தன்னை சுய ஆய்வு செய்தும், சுயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மையான சவால் நிறைந்த கதாநாயகர்களை பாருங்கள் அவர்களைப் போல உங்களாலும் மாற முடியும் அந்த இடத்தை அடைய உழைக்க வேண்டும். சினிமா ஹீரோக்களின் பின்னே செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தினார். அந்நிகழ்விற்கு கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தின் தாளாளர், முனைவர் கவிதா சுப்ரமணியன் தலைமையேற்றும், இயக்குனர் முனைவர் அனிதா ராணி முன்னிலை வகித்தும், முதலாமாண்டு மாண்வி தேனம்மை வரவேற்புரை ஆற்றினார், மாணவி தீபா நன்றியுரையும், மாணவி பிரசன்னாதேவி ஒருங்கிணைத்து நடத்தினார்கள். .