ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் 15.03.2019 அன்று "உலக நுகர்வோர் தினம்" சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை நிறுவனத்தின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்ரமணியன் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவர் தமது தலைமையுரையில் "மாற்றம் ஒன்றே மாறாதது" எனவே மாணாக்கர்கள் உலகமயமாக்களின் மாற்றத்திற்கு ஏற்ப தமது திறனை மாற்றிக் கொள்ளும் தன்னைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை சிறுகதைகளின் மூலம் விளக்கி கூறினார்.
இத்தினத்தின் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் எனும் நோக்கில் மேலாண்மையியல் மாணாக்கர்கள் "கலப்படப் பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி" அமைக்க, அதற்கு சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர், செயலர், பார் அசோசியேஷன், பதுக்கோட்டை நீதிமன்றம் திரு.K.மதியழகன், M.Com.,M.Phil. கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி மாணாக்கர்களை ஊக்கப்படுத்தினார். அவர் தம் சிறப்புரையில் நுகர்வோர் என்பதன் பொருள் உலக நுகர்வோர் தினம் உருவாக காரணம், தினம் அதன் வளர்ச்சியினைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். முக்கியமாக நுகர்வோரின் உரிமைகளான தகவல் அறிதல், தேர்வு செய்தல், தகுந்த கல்வியறிவு பெறுதல், சூழ்நிலையியலின் அறிவு, தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனைப் பற்றி விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து நுகர்வோர் தங்களது பிரச்சனைகள் சரிசெய்துக் கொள்ளும் முறையினையும் மாவட்ட, மாநில தேசிய நுகர்வோர் குறைதீர் அமைப்புகளைப் பற்றி விளக்கி கூறினார்.
கலப்பட பொருட்களின் கண்காட்சியினை கற்பக விநாயகா மேல்நிலைப் பள்ளி மாணவியரும் பார்வையுற்றனர். பள்ளி மாணவியருக்கு, மேலாண்மையியல் மாணாக்கர்கள் நுகர்வோர் தினத்தின் விழிப்புணர்வினை ஏற்படுத்த விழா இனிதே நிறைவுற்றது.
இத்தினத்தை நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் அனிதா ராணி, பேராசிரியர் விஜயலெட்சுமி ஒருங்கிணைக்க மாணவன் பிரேம் துவக்கவுரையும், மாணவன் முகமது இப்ராஹிம் நன்றியுரையும், ரேணுகாதேவி நிகழ்வுரையும் நிகழ்த்தினர்.